இத்தாலியில் நோர்சியா நகரை மையமாகக் கொண்டு கடந்த 24-ந் தேதி அதிகாலை நேரிட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம், அங்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமாட்ரைஸ், அர்குவாட்டா, அக்குமோலி, பெஸ்காரா டெல் டிராண்டோ ஆகிய பகுதிகள் உருக்குலைந்து போயின. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் நெருக்கடி நிலையை இத்தாலி அரசு பிரகடனம் செய்துள்ளது. பாதித்த பகுதிகளில் மறுவாழ்வு பணிகளுக்கு என 42 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.373 கோடியே 80 லட்சம்) செலவிட பிரதமர் மேத்யூ ரென்ஸி உறுதி அளித்தார். இந்நிலையில் இந்த நிலநடுக்கத்திற்கான நிவாரண நிதி திரட்டும் வகையில் ஒரு புதிய வேண்டுகோளை அந்நாட்டு அரசு விடுத்துள்ளது.
இது தொடர்பாக இத்தாலி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த தருணத்தில் மக்கள் அனைவரும் நிவாரண நிதி வழங்கும் வகையில் நமது நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களை பார்வையிட்டு செல்ல வேண்டும் இதன் மூலம் நிவாரண நிதி கிடைக்க இயலும் என்று இத்தாலி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அரசின் வேண்டுகோளை ஏற்று இத்தாலியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களையும் அந்நாடு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

No comments:
Write comments