1932 ஆம் ஆண்டிலேயே "தோழர்" என்றே அழைக்க வேன்டும் என குடிஅரசுபத்திரிகையில் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டவர் பெரியார். அந்த அறிக்கை தான் இது.
"இயக்க தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்வதிலும், பெயருக்கு முன்னால், பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக "தோழர்" என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா-ள-ஸ்ரீ, திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, நீஜத் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன். குடி அரசு பத்திரிகையிலும் அடுத்த வாரம் முதல் அதன்படியே செய்ய வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்"
குடி அரசு : 13.11.1932
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.
No comments:
Write comments