Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
யார் நமது எதிரிகள்? முஸ்லிமா இல்லை இந்துவா? பொது சிவில் சட்டம் ஓர் விளக்கம் - கட்டுரை பாக் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்...! யானை அழிப்பு - உயிரின அழிப்பு...‍! கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால்...?

Advertisement

Image and video hosting by TinyPic

May 24, 2017

எய்ம்ஸ் நிறுவனத்தை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ன் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்*

23.05.2017,
சென்னை
*மாணவர்களை உள ரீதியாக தாக்கும் மத்திய அரசு மற்றும் எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் பர்தா அணிய தடை விதித்த எய்ம்ஸ் நிறுவனத்தை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ன் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்*

கடந்த 7ம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான NEET நுழைவுத்தேர்வில் கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவர்களை மானபங்கம் செய்த மத்திய அரசு இத்தகுதி தேர்விற்கு பல்வேறு தரப்பினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் வலுத்தது. 

Image may contain: 2 people, outdoor

இதனை தொடர்ந்து NEET தேர்வு பல்வேறு சர்ச்சைகளில் முடிந்தது. 
அதேபோல் AIIMS நிறுவனமும் இந்திய அரசாங்கம் அளித்த அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இஸ்லாமிய பெண்களின் பர்தா அணியத் தடை விதித்துள்ளது. 

Image may contain: 1 person, sitting

தனிமனித சுதந்திரத்திற்கு தடை விதிக்கும் மத்திய அரசு மற்றும் எய்ம்ஸ் நிறுவனத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது. இந்த பாஜக அரசின் மாணவ விரோதப்போக்கை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பில் சென்னை ராஜ் பவனை மாணவர்கள் முற்றுகை போராட்டம் ..

Image may contain: 5 people, outdoor

இம்முற்றுகை போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் அக்பர் தலைமை மாநிலச் செயலாளர் ரியாஸ் அஹமது BE., சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.




 சிட்டி

Apr 17, 2017

சசி கும்பல் இல்லாத அதிமுக- எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் பச்சைக்கொடி!

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது பற்றி பேச்சு வார்த்தைக்கு வந்தால் அமர்ந்து பேசத் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது பற்றி இதுவரை யாரும் பேசவில்லை. யாராவது பேச வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.




ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. தொடர்ந்து, கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

இதனிடையே, கடந்த 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு, அதிமுக கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையால், இறுதியில் ஆர்.கே.,நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அணிகள் இணைய முடிவு
இரட்டை இலை சின்னதை பெற ரூ.60 கோடி பேரம் பேசப்பட்டு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட உள்ளது. டிடிவி தினகரன் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளதால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.




பேச்சுவார்த்தை 

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், இது குறித்து பேச யாரும் தங்கள் அணியை அணுகவில்லை என்றும் அவ்வாறு நிகழ்ந்தால் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு தயார்
யாராவது பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் அமர்ந்து பேச தயாராக உள்ளதாகவே கூறிய ஓ.பன்னீர் செல்வம், இரட்டை சின்னமும், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
 

சிட்டி

Apr 13, 2017

கத்தி திரைப்பட பாணியில் சென்னையை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள் ஆதரவு போராட்டம்!

விஜய் நடித்த கத்தி திரைப்படத்தில், விவசாயிகளின் கஷ்டத்தை சென்னைவாசிகள் தெரிந்துகொள்ள, சென்னைக்கு வரும் தண்ணீர் பைப்புகளை அடைக்கும் விதமாக போராட்டம் நடைபெறும். அதேபோல டிராபிக் பிரச்சினையை ஏற்படுத்தி போ


சென்னை: டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான இயக்குநர் கவுதமன் தலைமையில் இன்று சென்னையில் திடீரென போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். இதனால், சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
சென்னை கிண்டி, விமானநிலையம், வடபழனி சாலைகள் அனைத்தும் முடங்கிப்போயின. கிண்டி வழியாக சென்னைக்குள் எந்த வாகனமும் போக முடியவில்லை, அதேபோல சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியேற முடியவில்லை.
இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்படைந்தனர். கிண்டி முக்கிய பகுதி என்பதால் சென்னை நகரம் முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போராட்ட களம்

இதை உணர்ந்துதான் போராட்டக்காரர்கள் கிண்டி, மேம்பாலத்தை போராட்ட களமாக தேர்ந்தெடுத்துள்ளனர். விஜய் நடித்த கத்தி திரைப்படத்தில், விவசாயிகளின் கஷ்டத்தை சென்னைவாசிகள் தெரிந்துகொள்ள மறுப்பதாக குற்றம்சாட்டி, சென்னைக்கு வரும் தண்ணீர் பைப்புகளை அடைக்கும் விதமாக போராட்டம் நடைபெறும்.


கத்தி திரைப்படம்

இதனால் சென்னையில் குடிநீருக்கும், குளிக்கவும் கஷ்டம் ஏற்படும். மொத்த மீடியாக்களும், இப்போராட்டத்தை ஒளிபரப்பு செய்யும். இதன்பிறகே கிராமங்களில் நடந்து வரும் அக்கிரமங்கள் வெளியுலகிற்கு தெரியவந்து, மக்களின் நெருக்கடி காரணமாக விடிவுகாலம் பிறக்கும்.

விஜய் பட பாணி

இதேபோல சென்னையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து தலைநகர மக்களின் கவனத்தை ஈர்க்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். எனவேதான் அவர்கள் கிண்டியை தேர்ந்தெடுத்ததுள்ளனர். விமான நிலையத்திலிருந்து சிட்டிக்குள் வரும் விஐபிகள் இந்த சாலையை பயன்படுத்துவார்கள். அவர்களை போராட்டத்தின் சூடு எட்ட வேண்டும் என்பது போராட்டக்காரர்கள் நோக்கம்.


இதையும் கவனிக்கவும்

அதேநேரம், அவசரமாக மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளும், இதில் சிக்கிக்கொண்டது என்பது கவனிக்க வேண்டியது. இந்த விஷயத்தையும் போராட்டக்காரர்கள் கவனித்திருக்க வேண்டும்.

சிட்டி

விவசாயிகள் என்னை அவமானப்படுத்தி விட்டனர்.. பொன். ராதாகிருஷ்ணன் புலம்பல்

விவசாயிகள் தம்மை அவமானப்படுத்தி விட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

டெல்லி: விவசாயக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராடி வரும் விவசாயிகள் மத்தியில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். விவசாயிகள் இதனை ஏற்க மறுக்கவே, தன்னை விவசாயிகள் அவமானப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் அரை நிர்வாணமாக போராடி வருகின்றனர்.

சாலைகளில் படுத்து உருண்டு போராடிய அவர்கள் மொட்டையடித்தும், தலைகீழாக நின்றும், நாடாளுமன்றத்தின் முன்பு நிர்வாணமாக ஓடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 நாட்களாக போராட்டம்

கடுமையான வெயில், இரவில் குளிர் என வாட்டி வதைக்க தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாள்தோறும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தங்களை அழைத்து பேசும் வரை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

பொன். ராதாகிருஷ்ணன்


கடன் தள்ளுபடியில்லை

இதனிடையே, தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொந்தளிக்க செய்துள்ளது.

அவமானம் 

கோரிக்கைகளை எழுதிதர விவசாயிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் என்று கூறிய பொன். ராதாகிருஷ்ணன். தன்னை எளிதில் தொடர்பு கொள்ள முடியுமே என்றும் ஏன் தன்னுடைய வேண்டுகோளை ஏற்க விவசாயிகள் மறுக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார். பொன். ராதாகிருஷ்ணன் பலமுறை விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டி 

Mar 30, 2017

பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழுவில் நடிகை காயத்ரி ரகுராம்

டெல்லி: பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழுவில் நடிகை காயத்ரி ரகுராம்

கடந்த 2014ம் ஆண்டு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் கங்கை அமரனோடு, காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நடிகை காயத்ரி ரகுராம் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பாஜக வின் தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சிப் பணிகளில் ஈடுபடும் ஆர்வத்தைப் பாராட்டி, அவரை அங்கீகரிக்கும் வகையில், இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை காயத்ரி ரகுராம் டான்ஸ் மாஸ்டர் கலாவின் அக்காள் மகள் ஆவார். காயத்ரியின் குடும்பமே டான்ஸ் குடும்பம் தான். அவரது அப்பா ரகுராம், அம்மா கிரிஜா, சித்திக்கள் கலா, பிருந்தா என அனைவருமே சினிமா டான்ஸ் மாஸ்டர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டி

Mar 29, 2017

ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன. 


இந்த நிலையில் திடீரென ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறப்பட்டது. இதற்கு சிவசேனா கட்சி வரவேற்பு தெரிவித்திருந்தது. 

இது நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகளை கடும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனிடையே இன்று தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மோகன் பகவத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 மேலும் தாம் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான செய்தியும் தவறானது எனவும் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

சிட்டி 

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic