Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 22, 2017

பணமதிப்பழிப்பால் ரூ.100 கோடி இழப்பு : நெஸ்ட்லே!

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் தங்களது நிறுவனத்துக்கு ரூ.100 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்நிலைமை சீராவதற்கு இன்னும் ஆறு மாதங்களாகும் என்றும் நெஸ்ட்லே நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுரேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் முன்னணி நுகர்பொருள் உணவு தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே, இந்தியாவிலும் உணவுப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் குழந்தைகளுக்கான உணவு, பால் பொருட்கள், பானங்கள், சாக்லேட் மற்றும் மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. கடந்த நவம்பர் மாதம் வெளியான பணமதிப்பழிப்பு அறிவிப்பால் நாட்டிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதைப்போலவே, நெஸ்ட்லே இந்தியா’வுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுரேஷ் நாராயணன் கூறுகையில், “நவம்பர் மாதத்தில் பணமதிப்பழிப்பு அறிவிப்பானது எங்களது தொழிலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மட்டும் எங்களுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் காணப்பட்ட இழப்பு டிசம்பர் மாதத்தில் சிறிது முன்னேற்றமடைந்துள்ளது. அதேபோல ஜனவரி மாதமும், நடப்பு பிப்ரவரி மாதமும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
என்னைப் பொருத்தவரையில், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) நிறுவனங்கள் தங்களது இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இன்னும் இரண்டு காலாண்டுகளாவது ஆகும். பருவமழையின் தீவிரம், ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரை மற்றும் பட்ஜெட் அறிக்கையில் வருமான வரி சலுகை போன்ற காரணிகளால் எங்களது நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தயாராக உள்ளது” என்று கூறினார். கடந்த (பிப்ரவரி) 15ஆம் தேதி, நிறுவனத்தின் வருவாய் குறித்த அறிக்கையை வெளியிட்ட நெஸ்ட்லே இந்தியா, 2016ஆம் ஆண்டின் (அக்டோபர் - டிசம்பர்) காலாண்டில் நிகர லாபம் 8.66 சதவிகித சரிவுடன் ரூ.167.31 கோடி ஈட்டப்பட்டதாக தெரிவித்திருந்தது. அதேபோல, இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் 16.17 சதவிகிதம் சரிந்து, ரூ.2,261.28 கோடியாக மட்டுமே இருந்தது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic