Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 23, 2016

சுவாதியின் அக்கா இதை ஏன் மறுக்கவில்லை?- திலீபன் மகேந்திரன் அதிரடி!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவல் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.
ராம்குமார் கைது செய்யப்பட்டதில் இருந்தே இந்த கொலையை ராம்குமார் செய்யவில்லை என குரல் எழுப்பி வந்தார் தேசிய கொடியை எரித்து கைதான திலீபன் மகேந்திரன். ராம்குமாரின் ஃபேஸ்புக் கணக்கில் சென்று இந்த கொலை குறித்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சுவாதியை கொலை செய்தது ராம்குமார் இல்லை, பாஜகவை சேர்ந்த கருப்பு முருகானந்தம் தான் என கூறியதால் திலீபன் மீது கருப்பு முருகானந்தம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கும் திலீபன் மகேந்திரன் ராம்குமார் மரணம் குறித்து தற்போது பேசியுள்ளார்.
அதில், ராம்குமார் யார் என்பது சுவாதிக்கும், சுவாதி யார் என்பது ராம்குமாருக்கும் தெரியாது. சுவாதியை காதலித்ததாக நாடகம் நடத்தி, அப்பாவி ராம்குமாரை கொன்றுவிட்டார்கள். ராம்குமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவந்தோம்.
ராம்குமாரின் ஃபேஸ்புக் கணக்கை ஆராய்ந்ததில் அவருக்கு சுவாதியுடன் தொடர்பு இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. தற்கொலை செய்துகொண்டு இறந்த டி.எஸ்.பி.விஷ்ணுப்பிரியாவின் செல்போனில் உள்ள தகவல்களை வெளியிட்ட காவல்துறை சுவாதியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள தகவல்களை ஏன் வெளியிடவில்லை.
சுவாதி கொலை நடந்த அடுத்த நாள், சுவாதி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருவரை காதலித்ததாக வந்த தகவலை சுவாதியின் அக்கா நித்யா உடனடியாக மறுத்தார். ஆனால் சுவாதியை ராம்குமார் காதலித்தார் என காவல்துறை சொன்னபோது அதை மறுக்காமல் நித்யா ஏன் அமைதியாக இருந்தார் என திலீபன் அதிரடியாக கேட்டுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic