தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பணப்பட்டுவாடா புகாரின் காரணமாக தஞ்சாவூர் மற்று அரவக்குறிச்சி ஆகிய இருதொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் அதிமுக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. திமுக 90 இடங்களை பிடித்து பலமான எதிர்கட்சியாக விழங்கவிருக்கிறது. பெரிதும் பேசப்பட்ட மக்கள் நலக்கூட்டணி மற்றும் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இன்றைய தினம் முதலைமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆர்.கே நகரில் வெற்றி பெற்றதற்கான தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இன்று வழங்கப்படும். அதன் பின்னர் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை, சேப்பாக்கத்தின் உள்ள அண்ணா சிலை, மற்றும் மெளண்ட் ரோடில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்த இருக்கிறார்.
பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் கடிதத்தை ஆளுனர் ரோசையாவிடம் வழங்கப்பட இருக்கிறது. இதனை அடுத்து ஆளுனர் ரோசையா அதிகாரப்பூர்வமாக ஜெயலலிதாவிற்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.
வருகின்ற 23ஆம் தேதி சென்னை சேர்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைகழகத்தின் நூற்றாண்டுவிழா அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments