Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 20, 2016

தோல்வியடைந்ததை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார் உம்மன்சாண்டி



கேரள சட்டசபை தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் உம்மன்சாண்டி. இதற்கான கடிதத்தை அம்மாநில ஆளுனர் சதாசிவத்திடம் கொடுத்தார்.

தமிழகத்தை போன்றே கேரளத்திலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும், வாக்குகள் எண்ணப்பட்டு நேற்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஆளும் கட்சியாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முன்னனி கூட்டணி 47 தொகுதிகள் மட்டுமே வெற்றிபெற்று தோல்வி அடைந்தது.

இடதுசாரி கூட்டணியான் கம்யூனிஸ்ட் கட்சி 91 இடங்களை பெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனரிடம் அளித்துவிட்டு உம்மன் சாண்டி பத்திரிகையாளர்களுக்கு பேடி அளித்தார். அதில் அவர் கூறியது,

" நாங்கள் இந்த தோல்வியை எதிர்பார்க்கவில்லை, இந்த தோல்விக்கு நானும் ஒரு காரணம், தோல்வி குறித்து வரும் நாட்களில் ஆராய்ந்து தவறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை திருத்திக்கொள்வோம், எனினும் மக்களின் இந்த தீர்ப்பு மதிப்பளிக்கிறோம். பா.ஜ.க கேரளத்தில் முதன்முறையாக ஒரு தொகுதியில் வென்றுள்ளது, இதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இது முற்றிலும் தவறான வாதமாகும். பல இடங்களில் பா.ஜ.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணமாக இருந்திருக்கிறது. பா.ஜ.கவின் கொள்கைகள் கேரளத்தில் எடுபடாது அவர்களுடைய வாக்கு வங்கிகள் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிகரிக்கவில்லை என்பதே உண்மை. இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic