ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு சார்பாக கடந்த மார்ச் மாதம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் விதிமுறையை மீறி யமுனை நதிக்கரை பகுதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதம் நடந்ததால் தேசிய பசுமை தீர்ப்பாயம் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இந்நிலையில் அபராதத்தை கட்டாமல் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி அபராதம் கட்டாமல் தப்பிக்க முயற்ச்சி செய்ததை அடுத்து இவ்வமைப்பின் மீது அவமரியாதை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் அமைப்பிற்கு விதித்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார், ஆனால் இதனை முற்றிலுமாக நிராகரித்த ஆணையம் அபராத தொகையை கட்டியே தீர வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்துவிட்டது. இதனால் அனுமதி பெற்று முதலில் 25 லட்ச ரூபாயை கட்டிவிட்டு அடுத்த மூன்று வாரங்களுக்குள் மீதி தொகையை கட்டிவிடுகிறோம் என வாழும் கலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். காலம் கடந்துவிட்ட நிலையிலும் மீதி தொகையை கட்டத்தவறியதால் தொடர்ந்து வாழும் கலை நிர்வாகத்தை நிர்பந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Write comments