Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 2, 2016

ரமலான் நோன்பு - 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா


ரமலான் நோன்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகும் நிலையில் தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் பள்ளி வாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையின மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு, அவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட் டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், நோன்பு நோற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க எனது முந்தைய ஆட்சி காலத்தில் அதாவது 9.11.2001 அன்று நான் ஆணையிட்டிருந்தேன். 
அதன்படி, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  இது இஸ்லாமிய பெருமக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசியை வழங்கவேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளி வாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக, மொத்த அனுமதி வழங்க  நான் ஆணையிட்டுள்ளேன்.
பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன. இதன்படி, 4600 மெட்ரிக் டன் பச்சரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்.
இதனால், அரசுக்கு 2 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவாகும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் சுமார் 3000 பள்ளிவாசல்கள் பயனடையும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic