இந்தியாவில் தொடங்கப்படவுள்ள பிரீமியர் பட்ஸல் லீக் உள் அரங்க கால்பந்துத் தொடரானது இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரீமியர் பட்ஸல் லீக் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் கிரிக்கெட் தவிர, வேறு விதமான விளையாட்டுகளில் கவனம் செலுத்தப்படுவதில்லை. இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற பிரீமியர் பட்ஸல் லீக் உள் அரங்க கால்பந்து அமைப்பானது, இந்தியாவில் தொடரை நடத்தத் திட்டமிட்டிருப்பது இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
பட்ஸல் எனப்படும் உள் அரங்க கால்பந்து விளையாட்டு பற்றி இப்போதுதான் முதன் முறையாகக் கேள்விப்படுகிறேன். இந்த விளையாட்டுத் தொடருக்கான பிரத்யேகமான பாடலுக்கு இசை அமைக்கவுள்ளேன். அண்மைக் காலமாக விளையாட்டுத் துறை தொடர்பான அதிகளவு படங்களுக்கு இசையமைத்து வருவதால். விளையாட்டுத்துறை சார்ந்த புரிதல் அதிகரித்துள்ளது. அதனால் இலகுவாக இசையமைக்கக கூடியதாக இருந்தது என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி பாட்ஸ்மானுமாகிய விராட் கோலியும் கலந்து கொண்டார்.
செய்தி :: சாஹிப்...



No comments:
Write comments