அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு ஆபாச வார்த்தைகளால் பதிவிடப்பட்டது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 நிமிடங்களில் இந்த டுவிட்டர் பக்கத்தில் 8 பதிவுகள் பதிவிடப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் தரப்பில் இருந்து சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டு அந்த பதிவுகள் உடனடியாக நீக்கப்பட்டது.
திடீரென முடக்கப்பட்ட ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் பின்னர் சரி செய்யப்பட்டது. இருப்பினும் அந்த ஆபாச பதிவுகள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Write comments