தமிழக - கேரள எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், ஆகிய மாதங்கள் சீசனாகும். இக்காலங்களில் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவிகளில் குளிக்க 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக அருவிகளில் தண்ணீர் இல்லாததால், சுற்றுலா பயணிகளின் வருகை குற்றாலத்தில் குறைந்திருந்தது. இந்நிலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் ஐந்தருவிகளிலும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் குற்றாலத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments