இந்த விழாவை நிஷா என்னும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அளித்திருந்த அறிவிப்புக் குறிப்பின்படி நிகழ்ச்சியை தொகுத்தளித்திருக்கிறார் நிஷா. அதன்படி, இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் என்னும் வரிசையில் கதாநாயகர்கள், கதாநாயகிகளின் பெயர்களை மட்டும் வாசித்திருக்கிறார் நிஷா.
அறிவிப்புகளுக்குப் பிறகு மேடையில் பேசிய நடிகர் ராதாரவி, அவை நாகரிகம் இல்லாமல் “இந்த பொண்ணுக்கு ராதாரவி யாருன்னு தெரியல. இந்த "கருமத்தைக் கூட்டியாந்து நிகழ்ச்சி பண்றாங்க". அழகு மட்டும் இருந்தா போதாது, அறிவும் வேணும்” என்று கூறினார். ராதாரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல், மேடையில் இருந்த படக்குழுவினரும் அவர் பேசியதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது சுற்றியிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
”இறைவி” என்பது பெண் கடவுளைக் குறிக்கும் சொல் என்பதும், இறைவி திரைப்படம் பெண்களின் முக்கியத்துவத்தை, அவர்களுக்கான மதிப்பைப் பேசுகிறது எனக் படக்குழுவினர் தெரிவித்திருந்ததும், இசை வெளியீட்டு மேடையிலேயே பெண் தொகுப்பாளருக்கு அவமானம் நேர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
வீடியோவை காண:
No comments:
Write comments