அமெரிக்காவைச்சேர்ந்த குத்துச்சண்டனை நாக்கவும் மன்னனான முகமது அலி தனது 74வது வயதில் கடந்த 4ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அவரது சொந்த ஊரான கெண்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லே நகருக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைகப்பட்டிருந்தது. அவருடைய உடலுக்கு ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படும் என ஏற்கனவே அவரது குடும்பத்தினர் தெரிவித்தபடி, அவரது சொந்த ஊரில் இன்று இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கெடுத்து முகமது அலிக்கு பிரியா விடை கொடுத்தனர். இறுதிச் சடங்கள் அமெரிக்காவின் முன்னால் அதிபர் பில் கிளிண்டன், ஹாலிவுட் நடிகர் பில்லி கிறிஸ்டல், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, துருக்கி அதிபர் தாயிப் எர்டேகான், முன்னாள் குத்துச்சண்டை வீரர் லீனாக்ஸ் லீவிஸ் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தன்னுடைய இறப்பிற்கு பின் தனது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படவேண்டும் என முகமது அலி முன்னதாகவே தெரிவித்திருந்தார். குத்துச்சண்டையும் தாண்டி கருப்பின மக்களுக்காக போராடி பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்ட முகமது அலியின் இறுதி மூச்சு நின்றுவிட்டாலும், முகமது அலி ஒரு வரலாற்று நாயகராகவே இருந்தார் என்பதே நிதர்சனம்.

No comments:
Write comments