Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 11, 2016

7 தமிழர்களின் விடுதலைக்காக நடக்கவிருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு



பேரறிவாளன், சாந்தன், முருகேசன் உட்பட ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருந்து வரும் 7 தமிழர்களின் விடுதலை கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 வருடங்களாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகேசன், நளினி உட்பட 7 பேரின் விடுதலை கோரிக்கைக்காக‌ வேலூரிலிருந்து சென்னை கோட்டை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த பேரணிக்கு தற்போது காவல்துறை தரப்பிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை அடுத்து,  நாளை பிற்பகல் 1 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து தலைமைச்செயலகம் வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணிக்கு சினிமா நட்சத்திரம் விஜய் சேதுபதி உட்பட ஏராளமானவர்கள் ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic