கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 37 மொபைல் தயாரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் சுமார் 40,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், டெல்லி பல்கலைக்கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு பூங்காவான ’எலக்ட்ரோபிரேனியர் பார்க்’கை திறந்துவைத்தபின்னர் பேசுகையில், இந்தியாவை உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் தயாரிப்பு மையமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே 37 புதிய மொபைல் தயாரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் 40,000 பேர் நேரடியாகவும், 1.25 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 11 கோடி மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் 6 கோடி மொபைல் போன்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தோம். சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியச் சந்தைகளில் களமிறங்க அதிகளவில் முதலீடு செய்கின்றன இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments