Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 28, 2016

பெண்ணின் வயிற்றில் 22 பொருட்கள் அகற்றம்!

 

மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும்போது, ‘என்ன சாப்பிடுகிறோம், அதனால் நன்மை விளையுமா, இல்லையா?’ என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் கையில் கிடைப்பதை பசிக்குச் சாப்பிட்டு விடுகின்றனர். நாட்கள் செல்லச்செல்ல அவை பிரச்னையை உண்டாக்குகின்றன. அப்படித்தான், பாகிஸ்தானில் இருபத்தியிரண்டு வயதுள்ள பெண்ணின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் இருபதுக்கும் மேற்பட்ட உலோகப் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், குர்ராம் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். சிகிச்சையின் முதற்கட்டமாக அவர் வயிற்றுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்தனர். அப்போது அவருடைய வயிற்றில் ஹேர்பின், நகங்கள் மற்றும் கண்ணாடித்துண்டுகள் உள்ளிட்ட 22 பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

மருத்துவர்கள் சுமார் நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, அவரது வயிற்றிலிருந்த எல்லா பொருட்களையும் அகற்றினர். தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, அண்மையில் அமிர்தசரஸில் மனநலம் பாதித்த போலீஸ் அதிகாரி ஒருவர் இரண்டு மாதங்களாகக் கத்தியை உணவாகச் சாப்பிட்டு வந்துள்ளார். அவர் வயிற்றில் இருந்து 40 கத்திகள் அகற்றப்பட்டது நினைவிருக்கலாம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic