Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 27, 2016

குடிபோதையில் கார் ஓட்டி போலீஸ் ஜீப்பில் மோதிய பிரபல நடிகர்!


குடிபோதையில் கார் ஓட்டி, போலீஸ் வண்டி மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் கைது செய்யப்பட்டார்.

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். ‛முறைமாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார், ஆனால் அவரால் முன்னணி நடிகராக உயரமுடியவில்லை. அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது வா டீல், குற்றம் 23 உள்ளிட்ட அவரது படங்கள் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில், நடிகை ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடந்தது. இதில் நடிகர் அருண் விஜய், தன் மனைவியுடன் கலந்து கொண்டார். பின்னர் நள்ளிரவில் குடிபோதையில் காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது நுங்கம்பாக்கத்தில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸின் வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியிருக்கிறார். இதில் போலீஸின் வாகனம் சேதம் அடைந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

போலீசார் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை பாண்டிபஜார் போலீசார், அருண் விஜய்யை கைது செய்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் விபத்து ஏற்படுத்தியது ஆகிய இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic