கேரளாவின் பாரம்பரிய கொண்டாட்டமான ஓணம் பண்டிகை அடுத்த மாதம்செ 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் வேலை நேரங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடக் கூடாது. இதே போன்று அரசு அலுவலகங்களில் எவ்வித மலர் கோல போட்டிகளும் நடத்தக் கூடாது. அரசு அலுவலகங்களுக்குள் ஓணம் கொண்டாட்டத்திற்கான பொருட்கள் விற்பனை நடைபெறக் கூடாது. பண்டிகை காலங்களில் அரசு அலுவலகங்களுக்குள் வியாபாரிகள் வந்து விற்பனை செய்கிறார்கள். இதனால் பெரும் பகுதியான பணிகள் பாதிக்கப்படுகின்றன. வேலை நேரத்தின் போது அனைத்து அதிகாரிகளும் தங்களின் இருக்கையில் இருக்க வேண்டியது அவசியம்.
அரசு அதிகாரிகள் அனைவரும் உண்மையாக தங்களின் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஓணம் மட்டுமின்றி அனைத்து விழாக்களின் கொண்டாட்டங்களும் வேலை நேரத்தில் இல்லாமல் இருப்பது அவசியம். இதனை அரசு கடுமையாக பின்பற்றும். இவ்வாறு பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதி உள்ளார்.

No comments:
Write comments