சென்னை: 'ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவடைந்துவிட்டது என்பதை, அமைச்சர் நிரூபிக்க தயாரா,'' என, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அமைச்சர் வேலுமணி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட குடிநீர் தேவை பூர்த்தியாகி இருந்தால் மகிழ்ச்சி. ஆனால், 40 முதல், 50 சதவீத மக்களுக்கு, குடிநீர் வந்து சேரவில்லை. அதுதான் உண்மை.
அமைச்சர் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் குழுக்களை அழைத்து சென்று, அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டது என, அமைச்சர் நிரூபிக்க தயாரா; நானும் உடன்வரத் தயார்.
அமைச்சர் வேலுமணி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் முடிந்துவிட்டது. இத்திட்டத்தின் மூலம், மூன்று நகராட்சி, 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்கள், என, 24 லட்சம் மக்கள் பயன்பெறுவர் என, தெரிவிக்கப்பட்டது.
திட்டப்பணிகள் நடந்தபோது, அருகில் உள்ள கிராம மக்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கூடுதல் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இதன் மூலம், 33 லட்சம் மக்கள் குடிநீர் வசதி பெற்றுள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments