Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

மணிப்பூர் கவர்னராகிறார் முன்னாள் பா.ஜ.க அமைச்சர் நஜ்மா கெப்துல்லா


அஸ்ஸாம், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு கவர்னர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

மத்திய அமைச்சரவையிலிருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த பா.ஜ.க மூத்த தலைவர் நஜ்மா கெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேகாலயா கவர்னர் சண்முகநாதன், மணிப்பூர் மாநில கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப் மாநில கவர்னராக வி.பி.சிங் பத்னோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹரியான கவர்னராக உள்ள கேப்டன் சிங் சோலங்கி, பஞ்சாப் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனைத்து வந்தார். அஸ்ஸாம் மாநில கவர்னராக பன்வரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அஸ்ஸாம் மாநில கவர்னர் பொறுப்பை, நாகலாந்து கவர்னர் பதமனாப பாலகிருஷ்ண ஆச்சார்யா கூடுதலாக கவனித்து வருகிறார்.

அந்தமான் நிக்கோபார் தீவு துணை நிலை கவர்னராக ஜக்தீஸ் முகி நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் நியமனத்திற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic