Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

வேண்டுமானல் தீவிரவாதத்தை பற்றி பேசுவோம், கஷ்மீரை பற்றி அல்ல - மத்திய அரசு


தீவிரவாதத்தை குறித்து வேண்டுமானால் பேச்சுவார்த்தை நடத்துவோம், கஷ்மீர் தொடர்பாக அல்ல என மத்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு தெரிவித்துள்ளது.

கஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது. கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏஜாஜ் செளத்ரி கடந்த திங்கழன்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய தலைவர்களை இஸ்லாமாபாத்திற்கு அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் முன் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் கூறும்போது, பேச்சுவார்தை நடத்துவதற்கு இஸ்லாமாபாத் வர தான் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பற்றி பேசுவோம், கஷ்மீரைப்பற்றி அல்ல என தெரிவித்திருக்கிறார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தினாலேயே கஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துவருவதாகவும், கஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும், இதில் பாகிஸ்தான் தலையிடுவதற்கு ஒன்றுமில்லை என பதிலடிகொடுத்திருக்கிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic