Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 29, 2016

இந்து ராஷ்டிராவிற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்! - ஆர்.எஸ்.எஸ்


இந்து மதம் ஒரு பழமையான மதம். அது அன்பு, பக்தி, நம்பிக்கை, நெருக்கம் இவற்றை மட்டுமே போதிக்கிறது. அது யாருக்கும் எதிரான மதம் அல்ல என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் நடத்தப்பட்ட சரஸ்வதி சிசு மந்திர் நிகழ்சியில் கலந்து கொண்ட மோகன் பகவத் பேசியதாவது, "இந்து மதத்தின் கோட்பாடுகள் யாருக்கும் எதிரானது அல்ல. இந்துத்துவா என்பது எதிர்ப்பதோ, கட்டாயப்படுத்துவதோ அல்ல மாறாக அது அன்பு, பக்தி, நெருக்கம் போன்றவற்றை போதிக்கும் கோட்பாடாகும்" என தெரிவித்தார்.

பா.ஜ.கவை தவிர பல அரசியல் கட்சிகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மதவாத சக்திகள் என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்றும் கூறிவருவதை முற்றிலுமாக மறுத்தார். " நாங்கள் நாட்டிற்காக சேவை செய்கிறோம். நாங்கள் இதை சடங்காக நினைத்து செய்வதில்லை மாறாக சத்தியத்தின் அடிப்படையிலும் ஆன்மீகத்தை மையமாகக்கொண்டும் இதனை செய்து வருகிறோம்" என தெரிவித்தார்.

அதே சமயத்தில் பலகீனமாக இந்துக்கள் இருந்தால் அது இந்து மதம் ஆகாது. இந்துக்கள் வளவமாக வாழ வேண்டும். இந்தியாவில் எந்த ஒரு சமுதாயமும் வளமாக வாழ்வதற்கு தடை ஏதும் இல்லை. இந்து சமூகத்திற்கு இந்த சேவை அவசியப்படுகிறது என்கிற அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் தனது சேவைகளை வகுத்திருக்கிறது என்றார்.

எங்களைப்பொறுத்தவரை இந்து சமூகம் தான் எங்களுடைய கடவுள். அவர்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இருக்கிறோம். இதற்காக நாங்கள் அவர்களிடத்திலிருந்து எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்கவில்லை. இந்து ராஷ்டிராவை உருவாக்குவதற்காக எல்லா ரீதியிலும் சேவை செய்து வருகிறோம். அதே சமயத்தில் நாம் இதற்காகத்தான் சேவை செய்கிறோம் என்ற கர்வம் நமக்கு ஏற்படக்கூடாது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருப்பது போல் நமது செயல்பாடுகள் அமையக்கூடாது. புத்தர் அகிம்சை மற்றும் பொறுமையை போதித்தார். மகாபாரத யுத்தத்தில் கூட தர்மத்தை கடைபிடித்தவர்கள் நமது கடவுள்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. எனவே சுயம்சேவகர்கள் ஒவ்வொருவரும் நல்ல எண்ணத்தோடு செயல்படவேண்டும்.

இந்து தர்மத்தையும், அதன் கலாச்சாரத்தையு நிலை நாட்ட என்னவெல்லாம் தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் சுயம் சேவகர்கள் செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்கான அமைப்பு. இந்தியாவை முன்னேற்றுவதற்கு இதை விட சிறந்த வழி இல்லை" இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic