Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

கூகிள் நிறுவனத்தின் ஊழியர் கற்பழித்து கொலை


அமெரிக்காவில் கூகிள் நிறுவனத்தின் அதிகாரி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் கணக்கு மேலாளராக வனீசா மார்கோட்டி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தனது தாயுடன் பிரின்ஸ்டன்  என்ற கிராமப்புற பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து  சென்ற மார்கோட்டி இவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பார்த்தபோது, எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தால் தாயார், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, போலீசார் மார்கோட்டினை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவளது வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மரக்கட்டைகளுக்கு இடையில் எரிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடந்துள்ளது. விசாரணையில் அது மார்கோட்டின் உடல் தான் என தெரியவந்துள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட மார்கோட் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் அவரது தலை, கால் ஆகிய பாகங்கள் மட்டும் எரிந்துள்ளன என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தற்போது இக்குற்றசெயலில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கிராமப்புறமான பிரின்ஸ்டனில் 3,500 மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இதனால் இங்கு குற்றங்கள் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது. மார்கோட்டின் மரணம்  குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மார்கோட்டின் இறப்பால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அலுவகத்தில் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மார்கோட், அனைவரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவள். மார்கோட்டின் இறப்பு எங்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic