Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

ஈஷா யோகா மையத்தில் போலீஸ் ரெய்டு...!


கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிவந்த நிலையில் தனது மகள்களை மீட்க வேண்டும் என ஆட்கொணர்வு மனு செய்த பேராசிரியர் காமராஜ் தாக்கல் செய்த மனுவினையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை நீதிபதி  தலைமையிலான அதிகாரிகள்  ஈஷா மையத்தில் புதனன்று இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அருகே வெள்ளிங்கிரிமலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்களது இரண்டு மகள்களை மூளைச்சலவை செய்து அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டு தருமாறு கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த முன்னாள் பேராசிரியர் காமராஜ், சத்யஜோதி தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

இதைதொடர்ந்து கீதா மற்றும் லதா ஆகிய தங்களது மகள்களை மீட்டு தரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்யஜோதி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் மாவட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, சட்ட மைய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஈஷா யோகா மையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கீதா மற்றும் லதா ஆகியோரிடம் தனி அறையில் முதன்மை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அவர்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த விசாரணையின் அறிக்கையை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

3 மணிக்கு துவங்கிய விசாரணை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தங்களது மகள்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்கக்கோரியும் காமராஜ் மற்றும் சத்யஜோதி ஆகியோர் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய முன்னாள் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஓய்வு பெற்ற காவலர் மகேந்திரன், தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்செல்வி ஆகியோர் அடுத்தடுத்து அம்மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை அளித்து வந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic