Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 7, 2016

'சும்மா புலம்பிகிட்டு இருக்காதீங்க' அட்வைஸ் கொடுக்கும் சு.சாமி

காவேரி தண்னீர் விவகாரத்தில் தமிழக அரசு தன்னுடைய புலம்பலை நிறுத்த வேண்டுமென பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

காவேரி தண்ணீரை திறந்துவிடவேண்டுமென தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை அடுத்து, கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா சாகர் அணையிலிருந்து முதற்கட்டமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் தீவிரவமடைந்துள்ளது.

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்குமிடையே காவேரி தண்ணீர் தொடர்பான பிரச்சனை ஆண்டாண்டுகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொருமுறையும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றே தண்ணீர் பெற வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை விமர்சிக்கும் விதத்தில் பா.ஜ.கவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது "காவேரி நீர் பிரச்சனையில் தமிழக அரது தனது புலம்பலை நிறுத்திக்கொள்ள வேண்டும். எத்துனை நாட்களுக்கு இது போன்று வழக்குகளை தொடுத்துக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்...?

மக்களுக்கு தேவையான குடி நீரையும், விவசாயத்திற்கு தேவையான நீரையும் பெற்றுக்கொள்வதற்கு கடல் நீரை குடி நீராக்கும் திட்டங்களை அதிகப்படுத்தி  அதன் மூலம் தண்ணீர் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முன் வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic