Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 7, 2016

சிலை கரைக்க முயன்றபோது போலிஸாரை கொல்ல முயற்சி! (வீடியோ)

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சிலையை ஆற்றங்கரையில் கறைக்கும் நிகழ்வின் போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் இந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் கல்யான் பகுதியில் 'ஜரி மரி கணேஷ் உத்சவ் மண்டல்' என்ற அமைப்பின் சார்பாக விநாயகர் சதுர்த்தியின் போது சிலையை தீஸ்கோன் ஆற்றங்கரையில் கரைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.


நேற்று இரவு 9:30 மணியளவில் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற போது பாதுகாப்பு கருதி வரிசையில் செல்லுமாரு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி நிதின் தாக்ளே என்பவர் கூறியிருக்கிறார். இதனால் அவ்வமைப்பினருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் சிலையை கரைக்காமல் வீதியில் வைத்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரியை கடுமையாக தாக்கி அவர்கள் அவரை ஆற்றிற்குள் தள்ளி கொல்ல முயற்சித்துள்ளனர். இருந்தும் கடுமையாக போராடி நிதின் தாக்ளே தப்பித்துக்கொண்டார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்ததோடு மேற்கொண்டு  விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic