Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 24, 2016

சிறந்த புகைப்படத்துக்கு விருது பெரும் இந்தியர்கள்!


புகைப்படக் கலைஞர்கள் என்றாலே நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக வனவிலங்கு புகைப்படக் கலைஞர் என்றால் அளவுக்கு அதிகமான சவால்கள் இருக்கும். அவற்றை எல்லாம் மீறி பல வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், புகைப்படங்களை எடுக்கின்றனர்.
இந்நிலையில், லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் பிபிசி வனவிலங்கு மையம் இணைந்து வனவிலங்கு புகைப்பட விருதுக்கான போட்டியை நடத்தியது. 2016ஆம் ஆண்டுக்கான வனவிலங்கு புகைப்பட விருதுக்கு இந்தியாவில் இருந்து நயன் கானோல்கர் மற்றும் கணேஷ் எச்.ஷங்கர் தேர்வாகியுள்ளனர். இந்த விருது உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த நயன் கானோல்கர், நகர வனவிலங்கு பிரிவில் விருதை வென்றுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த கணேஷ் எச்.ஷங்கர் பறவை பிரிவில் விருதை வென்றுள்ளார். குவாலியரைச் சேர்ந்த உதயன் ராவ் பவார் இறுதி போட்டியிலேயே நின்றார்.
‘தி ஆலி கேட்’ என்ற புகைப்படம் நயன் கானோல்கரால் எடுக்கப்பட்டது. இந்த சிறுத்தை, மும்பை புறநகரில் ஆரே மில்க் காலனியில் சுற்றித் திரியும். இந்தப் புகைப்படத்தை எடுக்க நயன் கனோல்கருக்கு நான்கு மாதங்கள் ஆனது. இந்தப் புகைப்படம் தேசிய பூங்கா மற்றும் வார்லி பழங்குடியினர் வாழும் சிறுத்தைப்புலிகள் இடையிலான உறவை உயர்த்தி காட்டுகிறது. சிறுத்தைப்புலிகள் உலகின் மிக துன்புறுத்தப்பட்ட பெரிய பூனைகள் இருக்கும்போதுகூட வார்லி பழங்குடியினர் அவர்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த பெரிய பூனைகளை ஏற்றுக் கொள்கின்றனர்.
ஒரு கிளி பல்லியில் வாலை இழுப்பதுப் போன்ற ‘வெளியேற்ற முயற்சி’ புகைப்படத்தை கணேஷ் எச்.ஷங்கர் எடுத்துள்ளார். அப்படம், கிளி தன் கூட்டிலிருந்து பல்லியை வெளியே இழுப்பதைக் குறிக்கிறது
‘தி ராம் ஆஃப் டைன் ஷான்’ படம் உதயன் ராவ் பவாரால் எடுக்கப்பட்டது. குழுவாக இருக்கும் ஆடுகளை ஓநாய் துரத்துவது போன்ற படத்தை எடுத்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic