கல்லூரி வளாகத்திற்குள் பர்தா அணிந்து வந்ததை அடுத்து அங்கு பயிலும் இந்து-முஸ்லிம் மாணவர்களுக்கிடையே மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது.
கர்நாடக மாநிலம் தக்-ஷின் கன்னடா மாவட்டம் ஹங்கலில் ஸ்ரீ குமரேஷ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வருவதால அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய பலத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்து மாணவ மாணவிகள் காவி துப்பட்டாவை அணிந்து கல்லூரிக்குள் வருவதால் அங்கு இரு சமூக மாணவர்களுக்கிடையே பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
கல்லூரிக்குள் அனைத்து மாணவ மாணவிகளும் ஒரே மாதிரியான சீறுடையை அணிந்து வரவேண்டும், இதனால் மாணவர்களுக்கிடையே எந்த வேற்றுமையும் இருக்கக்கூடாது என்பதற்காக இதனை அமுல்படுத்தினோம். மாணவர் சேர்க்கை துவங்கும்போதே இதனை தெளிவாக கூறியிருந்தோம். ஆனால் சில ஆண்டுகளாக இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்குள் வருகிறார்கள். இதற்கு போட்டியாக கல்லூரியில் பயிலும் இந்து மாணவ மாணவிகள் காவி துப்பட்டாவை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருகிறார்கள். இதனால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது என கல்லூர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு தங்கள் தரப்பிலிருந்து கடிதம் எழுதியுள்ளனர். அதில் அரசு அதிகாரிகள் உடனே இவ்விசயத்தில் தலையிட்டு சுமூக முடிவை ஏற்படுத்தி தரவேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாவட்ட தாசில்தார் இவ்விவகாரம் தொடர்பாக இரு சமூக மாணவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இரு தரப்பினரும் இவ்விவகாரம் தங்களுடைய கவுரம் சம்மந்தப்பட்டது என்றும் அதனை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இது எங்களுடைய மதம் சம்பந்தப்பட்டது என முஸ்லிம் மாணவர்கள் கூறுகின்றனர்.
நாங்கள் எந்த இந்து அமைப்புடனும் தொடர்புடையவர்கள் அல்ல. இக்கல்லூரியில் சேரும்போது அனைவரும் பொதுவான சீறுடையில் கல்லூரிக்கு வரவேண்டும் என சொல்லப்பட்டது. அப்படியானால் அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்க வேண்டும். அவர்கள் எந்த மதத்தை பின்பற்றக்கூடியவர்களாக இருந்தாலும் சரி. கல்லூரிக்குள் பர்தா அணிந்து வருவதை நாங்கள் முற்றிலுமாக எதிர்கிறோம். காரணம் பர்தா அணியும் போது அவர்கள் எந்தமாதிரியான சீறுடையை அணிந்திருக்கிறார்கள் என்பது வெளியே தெரியாது. அப்படியானால் நாங்களும் வேறு ஏதாவது நிறத்தில் உடை அணிந்து வந்தால் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளுமா? என அங்குள்ள இந்து மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

No comments:
Write comments