வட இந்தியாவில் ராம்லீலா கொண்டாட்டங்கள் நடைபெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலும் அதற்கு போட்டியாக இராவனலீலாவை தமிழகத்தில் உள்ள திராவிட அமைப்பினர் நடத்தியுள்ளனர்.
விஜயதசமி, ஆயுதபூஜைகளை முன்னிட்டு வட இந்தியாவில் இராமலீலா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இக்கொண்டாட்டத்தின் போது இராவணனின் கொடும்பாவி எரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய இராணுவ நடத்திய துல்லிய தாக்குதலிற்கு பிறகு நடந்துள்ள இந்த கொண்டாட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பா.ஜ.கவினர் மற்றும் இந்து அமைப்பினர்கள் பாகிஸ்தான் அதிபர நவாஸ் ஷரீஃபின் புகைப்படத்தை கொடும்பாவியில் ஒட்டிவைத்து தீயிட்டு கொழுத்தினர். உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
தமிழகத்தில் இக்கொண்டாட்டங்களை கண்டித்து தாங்கள் இராவணலீலா நடத்தப்போவதாக திராவிட கழகம் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரங்களில் இராமனின் உருவ பொம்மை எரிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அப்படி செய்தால் பெரியாரின் உருவ பொம்மையை நாங்கள் எரிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

சென்னையில் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த இராவணலீலா நிகழ்சிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருந்த போதிலும் தடையை மீறி நேற்று மாலை 5 மணி அளவில் இராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு சந்திப்பில் திராவிட கழகத்தின் இப்போராட்டத்தில் ஈடுபட்டு இராமனின் உருவ பொம்மையை எரித்தனர். இதில் கலந்து கொண்ட 40 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை கண்டித்து நேற்று இரவே இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் பெரியார் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Write comments