Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 13, 2016

பா.ஜ.க பிரமுகர் கொலை எதிரொலி, கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்!

kerala full shutdown bjp activist killed
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே உள்ளது பினராய் கிராமம்.இது கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் சொந்த ஊர் ஆகும்.

இந்த ஊரைச் சேர்ந்தவர் பாரதீய ஜனதா தொண்டர் ரமீத். நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமீத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கண்ணூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

ரமீத் படுகொலை பற்றிய தகவல் பரவியதும், அங்கு வன்முறை வெடித்தது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மீது பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்தினர். சிலரின் வீடுகளை குறி வைத்து கற்கள் வீசப்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் போலீஸார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும், பாரதீய ஜனதா தொண்டர் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

பாரதீய ஜனதா தொண்டர் ரமீத் கொலையை கண்டித்து இன்று பாரதீய ஜனதா சார்பில் கேரளா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட் டிருந்தது. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கண்ணூர் மாவட்டத்தில் முழு அளவில் நடந்த போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும் கொலையுண்ட ரமீத்தின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏராளமான பாரதீய ஜனதா தொண்டர் கள் குவிந்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் 34 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தையட்டி, இந்த பஸ்கள் கேரளாவிற்கு செல்லவில்லை. குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இந்த பஸ்கள் இன்று இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic