Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 9, 2016

திரையுலகினரின் பாராட்டு மழையில் பிரதமர் மோடி!

rajni, kamal supports narendra modi

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்புக்கு திரையுலகினரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வாழ்த்துகளுக்கு மோடியும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருக்கிறார். அவற்றின் தொகுப்பு:

ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "வாழ்த்துகள் பிரதமர் மோடி ஜி. புதிய இந்தியா பிறந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

ரஜினிக்கு ட்விட்டரிலேயே பதிலளித்துள்ள மோடி "நன்றி. வளமானதும் எல்லா தரப்புகளையும் உள்ளடக்கக் கூடிய ஊழலற்றதுமான இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் தோளோடு தோள் சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "வணக்கங்கள் திரு. மோடி. இந்த முடிவு கட்சிகள் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட வேண்டும். முக்கியமாக ஒழுங்காக வரி கட்டுபவர்களால்" என்று தெரிவித்தார்.

கமலுக்கு பதிலளித்துள்ள மோடி, "இந்த முடிவு, மேம்பட்ட இந்தியாவில் வாழத் தகுதியான நேர்மையான குடிமகன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ்: அசாத்தியமான முடிவு மோடிஜி. வரலாற்றுச் சிறப்புமிக்கது. தலை வணங்குகிறேன். ஜெய்ஹிந்த். தூய்மையான இந்தியா. பெருமைப்படும் இந்தியன்.

சித்தார்த்: அன்புள்ள திரு. நரேந்திர மோடி. நீங்கள் ஒரு லெஜண்ட். தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் இன்றிரவு நன்றாக உறங்குவார்கள். இந்த நாளுக்கு நன்றி. தூய்மையான இந்தியா. ஜெய்ஹிந்த்.

அனிருத்: இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்த பிரதமரை வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்.

அதர்வா: ஊழலுக்கு அடி. காலம் மாறுகிறது, கனவு மெய்ப்படுகிறது. ஒரு மேம்பட்ட, பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஜெய்ஹிந்த்.

ஐஸ்வர்யா தனுஷ்: வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு நரேந்திரமோடி ஜி. ஊழலுக்கு எதிரான போராட்டம். ஜெய் ஹிந்த்.

முருகதாஸ்: வணக்கங்கள். ஊழலை எதிர்க்கும் மோடி. தைரியமான முடிவு. கருப்புப் பணத்துக்கு விழுந்த கடுமையான அடி.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic