Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 26, 2017

அர்ணாபின் புதிய டி.வி சேனலுக்கு சு.சாமி கடும் எதிர்ப்பு!


பிரபல ஆங்கில செய்தி சேனல் தொகுப்பாளர் அர்னாப் கோசுவாமி 'ரிபப்ளிக்' என்ற பெயரில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றை தொடங்கவுள்ளார். ரிபப்ளிக் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.கவின் மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்புரமணியசுவாமி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தேசிய சின்னம் மற்றும் பெயர் ஆகியவற்றை வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடாது என்ற 1950ம் ஆண்டு சட்ட விதியை மீறும் செயல்களான குடியரசுத்தலைவர், கவர்னம், குடியரசு, மத்திய அரசின் அலுவலக முத்திரை, பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. ஒரு செய்தி சேனலுக்கு ரிபப்ளிக் என்ற பெயருக்கு அனுமதி வழங்கியது சட்டத்துக்கு எதிரானதாகும். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அர்னாபுடன் சுப்பிரமணிய சுவாமி மோதுவது இது ஒன்றும் புதிதல்ல. டிவி விவாதங்களில் பல முறை சுப்பிரமணிய சுவாமி கலந்து கொண்டுள்ளார். 2014ஆம் ஆண்டில் நடந்த ஒரு விவாத மோதலில் அர்னாபை சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அரங்கில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அர்னாபின் எந்த  நிகழ்ச்சியிலும் சுப்பிரமணிய‌ சாமி கலந்து கொள்ளவில்லை.

கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடன் நேரடி  பேட்டி எடுத்த போது, சுவாமி குறித்து அர்னாப் கேள்வி எழுப்பி, மோடியின் விமர்சனத்திற்கு சப்புரமணிய‌ சுவாமி ஆளானார். இதன் பின் அர்னாபை தொடர்ந்து டுவிட்டர் மூலம் சு.சாமி தாக்கி வந்தார். டைம்ஸ் நவ் டிவியில் முதன்மை ஆசிரியர் பதவியில் இருந்த அர்னாப் சமீபத்தில் ராஜினாமா செய்தார். தற்போது ரிபப்ளிக் என்ற செய்தி சேனலை தொடங்குவதை பல வகைகளில் அர்னாப் பிரச்சாரம் செய்து வருகிறார். சுதந்திரமாக செய்தி வெளியிடப்படும். இந்த துறையை அரசியல் லாபிகளிடமிருந்து காப்பாற்றப்படும் என்று அவர் கூறி வருகிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic