Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 17, 2017

கொல்லப்பட்ட ரசிகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் விஜய்


250 ரூபாய் பணத்திற்காக விஜய் மக்கள் இயக்க தலைவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆம் தேதி வெளியான பைரவா படத்திற்காக விஜய்யின் ரசிகர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்கில் கட் அவுட் வைத்து அலங்கரித்துள்ளனர்.

இதனை மேற்பார்வையிடுவதற்காக விஜய் மக்கள் இயக்க தலைவர் இமயம் ரவி சென்றுள்ளார். அங்கு தனது பணியினை முடித்துவிட்டு, காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியின் வழியாக பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 குடிகார நபர்கள் ரவியிடம் பிரச்சனை செய்து அவரை அடித்து உதைத்துள்ளனர்.

இதில், அவர் மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அவரிடம்  இருந்த 250 ரூபாய் மற்றும் அவரின் கைப்பேசியை எடுத்துக்கொண்டு, அவரது உடலை பாலாறு ஆற்றில் வீசியுள்ளனர். ஆற்றில் வீசப்பட்ட இவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார். இந்நிலையில் இவரின் சடலம் ஆற்றில் மிதந்து கிடப்பது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்த கொலை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இவரிடம் கொள்ளையடிப்பதற்காக சீனிவாசன்(26), அப்பு(19) மற்றும் பாபு(23) ஆகிய 3 பேரும் இந்த பாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தற்போது, இவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic