இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் எஃப்.எஸ்.பியின் தகவல் பாதுகாப்பு மையத்தின் துணைத் தலைவர் செர்கே மீகைலோவ் அவரின் சக ஊழியர் டிமிட்ரி டொக்குசைஎஃப் மற்றும் முன்னாள் இணையதள பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை லேப்பின் ஊழியர் ரஸ்லன் ஸ்டியானஃப் ஆகியோர் அடங்குவர் என கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தேச துரோக குற்றம் சுமத்துவதற்கான அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்ட மூவரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா சட்டவிரோதமாக ஊடுருவியதில், சிஐஏ வெளியிட்ட உளவுத் தகவல்களுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
No comments:
Write comments