சர்தார்ஜி நகைச்சுவை மிகவும் பிரசித்தி பெற்றவை. இவற்றை அறியாதாவர்கள் இருக்க முடியாது. ஆனால், இந்த ஜோக்குகள் சீக்கிய இனத்தின் மீதான மதிப்பை குறைக்கும் விதத்தில் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், சர்தார்ஜி துணுக்குகள் தொடர்பாக, சீக்கிய இனத்தை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஹர்வீந்தர் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், இந்த ஜோக்குகளை தடை செய்ய வேண்டும். இவை சீக்கிய இனத்தினர் மீதான மதிப்பை குறைக்கிறது.
சர்தார்ஜி நகைச்சுவை துணுக்குகளை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். மீறினால், சுமார் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உத்தரவிட வேண்டும் என கோரபட்டிருந்தது. அதேபோல், இத்தகைய துணுக்குகளால் தான் உள்பட பலரும் கேலி கிண்டல்களுக்கு ஆளாகியதாகவும் தனது மனுவில் ஹர்வீந்தர் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் மீதான கடைசி விசாரணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது, இந்த துணுக்குகள் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.பேடி தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவினர், சுமார் ஆறு மாத காலத்துக்குள் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சர்தார்ஜி ஜோக்குகள் தொடர்பான அந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.
No comments:
Write comments