அப்படிப்பட்டவரின் மரணத்தில் நிலவும் மர்மங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. மிகப்பெரிய ஆளுமையான ஜெயலலிதாவின் மரணத்தில் கூட மர்ம முடிச்சா என்று ஆச்சரிய ஆதங்கம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்ன என்பதை ஆன்மீக அன்பர்கள் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை தெரிவிக்கிறார்கள்.
அவர்கள் சொல்வது இதுதான். ஜெயலலிதா மிகுந்த கடவுள் பக்தி கொண்டிருந்தார். கோயில் கோயிலாக சென்று வழிபட்டார். ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களை எல்லாம் செய்தார். எல்லாம் சரிதான் ஆனால் அவர் அறிந்தோ அறியாமலோ செய்த பாவம் ஒன்றுதான் அவருக்கு பல துன்பங்களை தந்துவிட்டது. அதனால்தன ராணி போல உலாவந்த அவர் தனிப்பட்ட வாழ்கையில் சோகங்களை சந்தித்தார். உறவுகள் முறிந்தன, சிறையில் அடைக்கப்பட்டார். இன்னும் ஏன் அவரது மரணம் கூட மர்ம முடிச்சில் சிக்கிக்கிடக்கிறது" என்கிறார்கள்.
அது என்ன பாவம்? அந்த ஆன்மீக அன்பர்களே சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரம், 1981ஆம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாடு சீரும் சிறப்புமாக நடந்தது. அந்த பிரம்மாண்ட நிகழ்வின் பகுதியாக காவிரி தந்த கலைச்செல்வி என்ற ஜெயலலிதாவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கு கொள்ள மதுரை வந்திருந்த ஜெயலலிதா அங்கு மூன்று நாட்கள் தங்கினார். அதில் ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச்சென்றார். அங்கு கம்பீரமாய் வீற்றிருந்த மதுரை மீனாட்சியை மனமுருகி தரிசித்தார். அத்தோடு வந்திருக்கலாம்
மீனாட்சிக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் ஜெயலலிதாவை கவர்ந்தன. அது குறித்து அங்கிருந்த அர்ச்சகரிடம் விசாரித்தார். அந்த நகைகள் குறித்து விளக்கிய அர்ச்சகர்கள், இன்னும் பல நகைகள் அம்மனுக்கு இருக்கின்றன. அவற்றை சிறப்பு பூஜை அன்று அணிவிப்போம். அதாவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, திருக்கல்யாணம் போன்ற நிகழ்வின் போது என்றனர்.
அந்த நகைகளை பார்க்க வேண்டும் என்றிருக்கிறார் ஜெயலலிதா. அர்ச்சர்கர்கள் அதிர்ந்தனர். கடவுள் விக்ரகத்துக்கு உள்ள அதே சக்தி அந்த விக்கிரகத்திற்கு அணிவிக்கப்படும் நகைகளுக்கும் உண்டு. குறிப்பிட்ட நாளில் அணிவிக்க வேண்டிய நகைகளை மற்ற நேரத்தில் பார்க்கக்கூடாது என்றார்கள்.
ஜெயாவின் பிடிவாத குணம் உலகம் அறிந்த விசயமாயிற்றே! தவிர அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் அபிமானத்துக்குரியவர். அவரது அழைப்பின் பேரில் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் நடனமாட வந்திருப்பவர். அந்த நகைகளை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிதார். வேறு வழியின்றி ஜெயலலிதாவை அழைத்துப்போய் அந்த நகைகளை காண்பித்தனர். அப்போது சட்டென சில நகைகளை எடுத்து தன் கழுத்தில் வைத்து அழகு பார்த்துவிட்டார் ஜெயலலிதா. அர்ச்சகர்கள் அதிர்சியி உறைந்து போயினர்.
நீங்கள் கோயில் நகைகளை பார்த்ததே தெய்வ குற்றம். இதில் கழுத்தில் வைத்து அழகு பார்க்குறீர்களே! அவற்றை வைத்துவிடுங்கள் என்று பதறிப்போய் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ஜெயலலிதாவோ அதனை ஆற அமர அணிந்துவிட்டு பின்னர் தான் நகைகளை திரும்ப கொடுத்தார். தெரிந்த தெரியாமலோ ஜெயலலிதா செய்த இந்த செயல் தெய்வ குற்றமாகிவிட்டது. இந்த சமப்வத்திற்கு பின்னர்தான் அவருக்கு அடுக்கடுக்கான சோதனைகள் வரத்துவங்கியது.
எம்.ஜி.ஆருக்கு பின் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் பதவியை அடைந்தாலும் அவர் தனது சொந்த வாழ்க்கையில் நொந்தே இருந்திருக்கிறார் என்பதை அவருடைய நெருங்கிய வட்டாரங்களைச்சேர்ந்தவர்கள் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள். மீனாட்சி அம்மனின் சாபம் தான் இவற்றிற்கெல்லாம் காரணம் என்கிறார்கள் அந்த ஆன்மீகவாதிகள்.
No comments:
Write comments