Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 1, 2016

விமான பணிப்பெண்ணிடம் தகராறு - மலையாள நடிகர் கைதுசெய்ப்பட்டு விடுதலை

அபுதாபி விமான நிலையத்தில் பணிப்பெண்ணிடம் தகராறு செய்ததாக மலையாள நடிகர் கைது செய்யப்பட்டார். பின்னர் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அதிகாரிகள் அவரை விடுவித்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு நேற்று முன்தினம் எதிகாத் விமானம் புறப்பட்டு வந்தது. இந்த விமானத்தில் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகர் ஜினு ஜோசப் பயணம் செய்தார். விமான பயணத்தின்போது அவர் பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்பட்டது.

அபுதாபி விமான நிலையத்துக்கு இரவில் அந்த விமானம் வந்ததும் இந்த சம்பவம் குறித்து விமான நிலைய
பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த பணிப்பெண் புகார் செய்தார்.

அதன்பேரில் மலையாள நடிகர் ஜினு ஜோசப்பை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் அதிகாரிகளிடம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். தனது வருத்தத்தை கூறி மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விடுவித்து, தொடர்ந்து பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கினர்.

விமானத்தில் நடந்த சம்பவம் பற்றி ஜினு ஜோசப் தனது முகநூல் பக்கத்தில், ‘‘விமானத்தில் எனது இருக்கையின் முன்புறம் இருந்த டி.வி.யை அணைக்கும்படி பணிப்பெண்ணிடம் கூறினேன். ஆனால் அவர் டி.வி.யை அணைக்காமல் ஒரு போர்வையை கொண்டுவந்து அதன்மேல் மூடினார். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டபோது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் அபுதாபி விமான நிலைய அதிகாரிகளால் நான் கைது செய்யப்பட்டேன். நான் விடுதலையாக காரணமாக இருந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic