ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.
8 அணிகள் இடையிலான 9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழையும்.
இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று மாலை அரங்கேறிய 26–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சும், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அணியில் 4 மாற்றமாக டுமினி, பவான் நெகி, ஷபாஸ் நதீம், இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கார்லஸ் பிராத்வெய்ட், முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் கிறிஸ் லைன், உனட்கட், ஷகிப் அல்–ஹசன் ஆகியோருக்கு பதிலாக பியுஷ் சாவ்லா, பிராட் ஹாக், ஜாசன் ஹோல்டர் இடம் பெற்றனர்.
‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும் (0), குயின்டான் டி காக்கும் (1 ரன்) ரஸ்செல் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து டெல்லி அணி மீள்வதற்குள் சஞ்சு சாம்சனும் (15 ரன்) நடையை கட்டினார். 32 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (5 ஓவர்) இழந்து நெருக்கடியில் தவித்த டெல்லி அணியை கருண் நாயரும், ஐ.பி.எல். அறிமுக வீரர் சாம் பில்லிங்சும் (இங்கிலாந்தை சேர்ந்தவர்) பொறுப்புடன் விளையாடி சரிவின் பிடியில் இருந்து மீட்டனர். 11 ஓவர்களை (77–3) கடந்த பிறகு ரன்ரேட்டை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர்.
இந்த ஜோடி 4–வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து அசத்தியது. கருண் நாயர் 68 ரன்னிலும் (50 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), அடுத்து வந்த கிறிஸ் மோரிஸ் ரன் ஏதுமின்றியும் ஒரே ஓவரில் வெளியேறினர். ஆனாலும் டெல்லியின் ரன்வேகம் மட்டும் குறையவில்லை. இறுதி கட்டத்தில் கார்லஸ் பிராத்வெய்ட் வாணவேடிக்கை காட்டினார். 20 ஓவர் உலக கோப்பை ஹீரோவான அவர், பிராட் ஹாக், உமேஷ் யாதவின் ஓவர்களில் சிக்சர்களை பறக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதற்கிடையே, அரைசதத்தை பூர்த்தி செய்த பில்லிங்ஸ் 54 ரன்களில் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். பிராத்வெய்ட் தனது பங்குக்கு 34 ரன்கள் (11 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் டெல்லி வீரர்கள் 80 ரன்களை திரட்டினர்.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. கேப்டன் கவுதம் கம்பீர் 6 ரன்னிலும், யூசுப் பதான் 10 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.
அபாயகரமான பேட்ஸ்மேன் ஆந்த்ரே ரஸ்செல் களத்தில் நிற்கும் வரை மட்டுமே டெல்லி வீரர்கள் மத்தியில் கலக்கம் தென்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அவரை (17 ரன், 12 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) சாய்த்து திருப்பத்தை ஏற்படுத்தி தந்தார். அதுவும் ரஸ்செல் நேர்எதிரே மின்னல் வேகத்தில் அடித்த ஷாட்டை, பந்து வீசிய மிஸ்ராவே கொஞ்சம் குனிந்து பிடித்த விதம் மெய் சிலிர்க்க வைத்தது. டெல்லி வீரர்களின் பீல்டிங் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது.
18–வது ஓவர் வரை போராடிய உத்தப்பா 72 ரன்களில் (52 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்ததும் அவர்களின் நம்பிக்கை முழுமையாக தகர்ந்தது. முடிவில் கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே கொல்கத்தாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.
ஆல்–ரவுண்டராக ஜொலித்த டெல்லி வீரர் பிராத்வெய்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றது. 6–வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது 4–வது வெற்றியாகும். கொல்கத்தாவுக்கு 3–வது தோல்வியாகும்.
கொல்கத்தா கேப்டன் கம்பீர் கூறுகையில், ‘முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் அவர்கள் 186 ரன்களை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்களை 150 முதல் 160 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி இருக்கலாம். 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம். எல்லாம் பெருமையும் டெல்லி பேட்ஸ்மேன்களையே சாரும். கடந்த இரு ஆட்டங்களில் எங்களது செயல்பாடு சாதுர்யமாக இல்லை’ என்றார்.

கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

No comments:
Write comments