தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அதிகாரியின் கீழ் இயங்கும் படையின் சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் தமிழகம் முழுவது பறக்கும் படையினரால் பட்டி தொட்டி எங்கும் சோதனை நடைபெற்றுவருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை கடந்த பல வருடங்களாக அறங்கேறி வருவது மிகவும்
வருதப்படவேண்டிய விஷயமாகும். காலம்காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் அதன் மூலம் சம்பாதித்த கருப்பு பணங்களை மீண்டும் செலவிட்டு மீண்டும் பதவி பெற்றுக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 3 கோடியே 40 லட்ச ரூபாய் பணம் மற்றும் 125 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் தேர்தல் பறக்கும் படையினர் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் 3 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 245 கிராம் எடையுள்ள 125 தங்க நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தேர்தல் அலுவலருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர் விஜயகுமாரி மற்றும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Write comments