ஒரு மாதத்துக்கும் மேலாக பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டி விற்ற தங்கம் கடந்த 27-ந்தேதி பவுன் 21 ஆயிரத்து 880 ஆக குறைந்தது.
அதன்பின்னர் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய நாட்களில் ரூ.72 குறைந்து ரூ.21 ஆயிரத்து 808 ஆக இருந்தது.
இன்று பவுனுக்கு மேலும் ரூ.112 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 696 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.2,712-க்கு விற்கிறது.
பங்குசந்தையில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுவதாலும், சர்வதேச சந்தை விலை நிலவரப்படியும் தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.570 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.38 ஆயிரத்து 795 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்கிறது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments