சென்னையில் கடந்த ஜனவரியில் பெய்த கனமழை காரணமாக நடைபெறவிருந்த சென்னை புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது சென்னை தீவுத்திடலில் நாளை கண்காட்சி தொடங்கவிருக்கிறது.
புத்தக கண்காட்சிக்குண்டான ஏற்பாடுகள் அனைத்து நிறைவு பெற்றுவிட்டன. மொத்தம் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது இதில் 450 பதிப்பகங்கள் பங்கேற்கும் இந்த புத்தக கண்காட்சியில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்து, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளிலும் புத்தகங்கள் இடம்பெரும் என புத்தக பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
13 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்சிகளும் நடத்தப்படும் என புகழேந்தி தெரிவித்தார். தொழில்நுட்பத்தில் உச்சானி கொம்பில் பயணித்துக்கொண்டிருக்கும் உலகில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகம் வந்துவிட்ட நிலையிலும் வாசிப்பு கலாச்சாரத்திற்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை என்பதை சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து குவியும் மக்களே அதற்கு சான்று என்றால் அது மிகையாகாது.
No comments:
Write comments