டெல்லியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 25க்கும் மேற்பட்ட விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப நிலையுடன் அனல் காற்றும் வீசி வந்தது. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை வாட்டியதால் பொதுமக்கள் அதிக உஷ்ணத்தால் பெரும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த தட்வெப்பம் திடீரென மாறி, டெல்லியில் பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசியது. டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பரவலாக பலத்த மழை பெய்தது.
பிரதமர் மோடி கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு டெல்லி திரும்பியபோது அவர் வந்த விமானத்தை டெல்லியில் தரை இறக்க முடியாத அளவிற்கு அந்நகரில் மோசமான வானிலை நிலவியது. இதனால் பிரதமரின் விமானம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments