ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ள உத்தரவின்படி புதுவை மாநில புதிய கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து புதுவை பொறுப்பு கவர்னராக பணியாற்றி வந்த அஜய்குமார்சிங் கடந்த வியாழன் அன்று பதவி விலகிவிட்டார்.
புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கிரண்பேடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புதுவை கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய கவர்னராக கிரண்பேடி பதவியேற்றதையொட்டி புதுவை கவர்னர் மாளிகை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் கவர்னர் மாளிகை முழுவதும் அழகுபடுத்தப்பட்டிருந்தது. அதோடு கவர்னர் மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
செய்தி :: சாஹிப்...
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments