திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரத்தில் காவல்துறையினரின் அனுமதியோடும் ஆசியோடும் கள்ளச்சந்தைகளில் காலை 6 மணி முதலே மது விற்பனை நடப்படாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்துவேன் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில் முதற்கட்டமாக 500 சில்லறை மதுக்கடைகளை மூடுதல் மட்டும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைப்பது என ஆணை பிறப்பித்தார். இதனால் வழக்கமாக காலை 10 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் கள்ளச்சந்தைகளில் மதுவிற்பனை காலை 6 மணி முதலே நடைபெற்றுவருகிறது என திருவண்ணாமலை மாவட்ட ஆரணி மக்கள் குமுறுகின்றனர். காவல்துறையினரே இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், அவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதனை கண்டும் காணாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் பல இடங்களில் போலி மதுவகைகளும் விற்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.
No comments:
Write comments