திருவனந்தபுரம்: ஜிசா கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே தலித் கல்லூரி மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கேரள மட்டுமல்லாது நாட்டையே உலுக்கியது.
சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப்பட்டிருக்கிறார். அவரது உடலில் 30ற்கும் மேற்பட்ட இடங்களில் கூர்மையான ஆயுதத்தை கொண்டு கீறி இருக்கிறார்கள். அவரது பெண்ணுறுப்பு உட்பட பல இடங்களில் கொடூரமான கீரல்கள் இருந்தது. ஜிஷா கற்பழிக்கப்பட்ட பின்னர் அவளை கொலை செய்வதற்காக கொடூரமான முறையில் அக்குற்றவாளி நடந்து கொண்டுள்ளான். வெளியே சென்றிருந்து ஜிஷாவின் தாய் வீடு திரும்பியபோதுதான் ஜிஷாவிற்கு இத்தகைய நிகழ்வு நடந்திருக்கிறது என்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலமாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, இது தொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்த போதிலும் இதுவரை எந்த ஒரு திருப்பமும் இவ்வழக்கில் ஏற்படாததால் ஜிஷாவின் தாயார் காவல்துறையின் விசாரணையில் தொய்வு இருப்பதகவும் எனவே இவ்வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் கேரள உயர் நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐற்கு மாற்ற முடியாது என மறுத்துள்ளது.
மலையாள நடிகர் ஜெயராம் ஜிஷாவின் தாயாருக்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். பெரும்பாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜிஷாவின் தாயாரை சந்தித்தார் நடிகர் ஜெயராமன்.
No comments:
Write comments