கடந்த 2008ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று குண்டுவெடித்தது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அப்போது இவ்வழக்கை விசாரித்த மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரி ஹேமந்த் கர்கரே, பிரக்யா சிங் தாகூர், ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
ஹெமந்த் கர்கரே 2008 நவம்பர் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் இவ்வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க துவங்கியது. இவ்வழக்கு இரண்டு அதிகாரிகள் தலைமையில் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. சஞ்சீவ் சிங் மற்றும் ஜி.பி சிங் ஆகிய இருவரின் தலைமையில் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டது. இதில் முதலில் விசாரணை நடத்திய சஞ்சீவ் சிங் பிரக்யா சிங் மற்றும் கர்னல் புரோஹித் ஆகிய இருவரும் குற்றவாளிகள்தான் என விசாரணை அறிக்கையை சமர்பித்தார். ஆனால் இரண்டாவதாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ அதிகார் ஜி.பி. சிங் இருவர்கள் மீது எதிராக இருக்கும் ஆதாரங்கள் வலுவற்றதாக இருக்கிறது எனக்கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்தார்.
2008ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் பிரக்யா சிங் தாகூர் தற்போது தனக்கு ஜாமின் வேண்டுமென மனுதாக்கள் செய்துள்ளார்.
No comments:
Write comments