அமெரிக்க அதிபர் ஒபாமா ஜப்பான் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் அணு குண்டு தாக்குதலால் சிதைந்துபோன ஹிரோஷிமா நகருக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு செல்லும்போது அணுகுண்டு தாக்குதலுக்காக தான் ஜப்பானிடம் மன்னிப்பு கோரப்போவதில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஜப்பானிற்கு ஹிரோஷிமா நகருக்கு சென்ற ஒபாமா அங்கு அணுகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் பீஸ் மெமோரியல் பூங்காவிற்கு சென்று இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தனது டுவிட்டரில் விமர்சித்த தற்போதையை அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கூறும்போது "1941 அமெரிக்க துறைமுகம் பியர்ல் ஹார்பரில் ஜப்பான் இராணுவம் நடத்திய தாக்குதலைப்பற்றி ஏன் ஒபாமா வாய் திறக்கவில்லை? அந்த தாக்குதலில் 2000 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனரே, இதனால் ஏற்பட்ட நிர்பந்தத்தினாலேயே அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்தது என்பதை மறைக்க முடியாது!" என்று குறிப்பிட்டிருந்தார்.
எனினும் வெள்ளை மாளிகை இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் டிரம்பின் ஆதரவாளர்களும் டிரம்போடு இணைந்து கொண்டு ஒபாமாவை விமர்சித்தனர் "ஹிரோஷிமா சம்பவத்திற்கு மன்னிப்பு கோரவில்லை என்று சொல்லிவிட்டு அங்கு சென்ற ஒபாமா துக்கம் அனுஷ்டிக்க வந்துள்ளதாக கூறியதை பார்கும்போது மன்னிப்பு கேட்பதற்காகவே அங்கு சென்றிருக்கிறார்" என்று விமர்சித்துள்ளனர்.
No comments:
Write comments