சமீபத்தில் புதுச்சேரி மாநில ஆளுனராக நியமிக்கப்பட்ட கிரண்பேடிக்கு ஒரு பெண் எம்.எல்.ஏ காலில் விழுந்தார், இப்படியெல்லாம யார் காலிலும் விழக்கூடாது என கிரண் பேடி அவருக்கு அறிவுரை கூறினார்.
புதுச்சேர் மாநில ஆளுனராக கிரண்பேடியை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார். இதனை அடுத்து புதுச்சேரிக்கு வந்த கிரண் பேடி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
இதனையெடுத்து புதிதாக பதவி ஏற்கவுள்ள முதலமைச்சர் நாராயணசாமி, கட்சித்தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட புதிய எம்.எல்.ஏக்கள் கிரண் பேடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நெட்டப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜவேணி கிரண் பேடிக்கு சால்வை அணிந்து வாழ்த்து தெரிவித்து சற்றும் எதிர்பார்காத சமையத்தில் கிரண் பேடியின் காலில் விழுந்து வணங்கினார். அதிர்ச்சி அடைந்த கிரண்பேடி உடனே பதிலுக்கு அவரும் விஜயவேணியின் காலில் விழுந்து பதிலுக்கு வணக்கத்தை தெரிவித்து விட்டு, அவரது கன்னத்தை தடவியபடி யாரும் யாருடைய காலிலும் விழக்கூடாது என அறிவுரை கூறினார்.
புதுச்சேரியை வளமான மாநிலமாக மாற்ற அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம், இங்கே சுற்றுளாத்துறை மேம்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும். ஆன்மீகமும் இங்கு தழைத்துள்ளது, அதனையும் கருத்தில் கொள்ள் வேண்டும். ஒரு ரூபாய் அரசு பணம் கூட முறைக்கேடு செய்யப்படக்கூடாது, அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். முறைகேடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
No comments:
Write comments