கடந்த மே 16ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 232 தொகுதிகளில் நடைபெற்றது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவை ஒரு வாரத்திற்கு தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதால் பல கட்சிகளும் புகார் அளித்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, தற்போது இவ்விரண்டு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் வந்த நிலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரவக்குறிச்சி , தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் பணப்பட்டுவாடா செய்கின்றன என்ற புகார் வந்தததால் தான் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத்திருக்கிறது. அப்படியானால் பணப்பட்டுவாடா நடைபெற்றது ஊர்ஜிதமாகிவிட்டது. இனி எப்ப தேர்தல் நடத்தினாலும் இவ்விரு கட்சிகளும் பணம் கொடுக்கத்தான் போகின்றது. தேர்தல் ஆணையத்தால் ஒரு நடவடிக்கையு எடுக்க முடியாது. இதனால் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டது மற்ற கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும்தான். எனவே தேர்தல் ஆணையம் அவர்கள் செய்த தேர்தல் செலவுகளை திருப்பி கொடுக்க வேண்டும். அவர்கள் ஆட்சியில் இருந்து ஊழல் செய்து சம்பாதித்த பணம் அல்ல அது. கேட்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Write comments